திருவில் என்பதன் பொருள்வானவில்.
1. சொல் பொருள் விளக்கம்
(பெ) இந்திரவில், வானவில்,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
திருவில் அல்லது கொலை வில் அறியார் – புறம் 20/10 வானத்தில் தோன்றும் இந்திரவில் அல்லது பகைவரது கொலை வில்லை அறியார் தேர் செலவு அழுங்க திருவில் கோலி - ஐங் 428/1 திருவில் குலைஇ திரு மணி புரையும் - பதி 88/32 எருவை கோப்ப எழில் அணி திருவில் வானில் அணித்த வரி ஊதும் பல் மலரால் - பரி 18/48,49 மலை மிசை குலைஇய உரு கெழு திருவில் பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி - அகம் 84/1,2 திருவில் தேஎத்து குலைஇ உரு கெழு - அகம் 175/16 நாடு கெழு திருவில் பசும் பூண் செழியன் - புறம் 76/9 திருவில் இட்டு திகழ்தரு மேனியன் - சிலப்.மது 15/156 திருவில் விலங்கு ஊன்றி தீம் பெயல் தாழ - கார்40:1/2 திருவில் இட்டு திகழ்தரு மேனியள் - மணி 6/10
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்