Skip to content
திற்றி

திற்றி என்பது மென்று தின்னக்கூடிய தசை

1. சொல் பொருள்

(பெ) 1. வேகவைத்த இளம் தசையே திற்றி, 2, கடித்துத் தின்பதற்குரிய உணவு, 3. உண்ணும் நிலையிலுள்ள இறைச்சி, 4. தின்று தீர்க்க முடியாத கொழுத்த இறைச்சி

2. சொல் பொருள் விளக்கம்

மென்று தின்னக்கூடிய தசை திற்றி எனப்படுகிறது. எனவே வேகவைத்த இளம் தசையே திற்றி எனலாம்.

திற்றி
திற்றி

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Eatables that must be masticated before being swallowed

meat

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

விழவு அயர்ந்து அன்ன கொழும் பல் திற்றி/எழாஅ பாணன் நன் நாட்டு உம்பர் – அகம் 113/16,17

விழா கொண்டாடியது போன்ற கொழுமையான பலவகை உணவுகளையும்

பல்பூங்கானத்து அல்குநிழல் அசைஇத்
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
நாகு ஆ வீழ்த்துத் திற்றி தின்ற – அகம் 249/13

மழவர் எனப்படும் மறவர் மரநிழலில் இளமையான பசுங்கன்றை அடித்து, அதன் தசையை அரிந்துச் சுட்டுத் தின்றார்கள் என்பதை அகப்பாடல் குறிப்பிடுகிறது. திற்றி என்பது உண்ணும் நிலையிலுள்ள இறைச்சி என்பதை வலியுறுத்துவதைக் காணலாம்.

திற்றி
திற்றி

தவாப் பெருக்கத்து அறா யாணர்
அழித்து ஆனாக் கொழும் திற்றி,
இழித்து ஆனாப் பல சொன்றி
உண்டு ஆனாக் கூர் நறவில்
தின்று ஆன இன வைகல் – மது 211,212

பாண்டியன் நெடுஞ்செழியனின் அரண்மனையில் எப்போதும் உண்பதற்குப் பலவிதப் பண்டங்கள் கிடைக்கும் என்பதை,என்று கூறும்போது, தின்று தீர்க்க முடியாத கொழுத்த இறைச்சி என்பதற்குத் திற்றி என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கலாம்.

எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே – பதி 18/2

இரவுக் குறும்பு அலற நூறி நிரை பகுத்து
இரும் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலைவில் ஆடவ – அகம் 97/5

ஊருக்கு வெளியில் வெகுதொலைவில் மாடுமேய்ப்பவர்கள் இரவில் தங்குவதற்குப் பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்திக்கொண்டு மாடுகளைக் கிடைபோட்டிருப்பர். அப்போது வில்லேந்திய கள்வர்கள் அவர்களைக் கொன்று, ஆநிரைகளைக் கவர்ந்து, அவற்றைத் தமக்குள் பங்கிட்டுக்கொண்டு, அவற்றுள் நல்ல கன்றை அடித்துப் பாறை முடுக்கில் சுட்டுச் சாப்பிடுவர் என்பதை அகநானூறு குறிப்பிடுகிறது. கெண்டுதல் என்பது துண்டாக்கி உண்ணல்.

திற்றி
திற்றி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *