சொல் பொருள்
தீயாற்றல் – குழிமெழுகுதல்
சொல் பொருள் விளக்கம்
இறந்தவர்களை எரித்தால் மறுநாள் தீயாற்றல் என ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும். புதைத்தாலும் நிகழ்வதே. அதனைக் குழிமெழுகுதல் பாலாற்றல் காடாற்றல் எனவும் வழங்குவர். தீயை நீர்விட்டு அணைத்துப் பாலூற்றல் தேன் சொரிதல் எலும்பை எடுத்து உருவமைத்து வழிபடல் ஆகியவெல்லாம் நிகழும். நீர் கொணர்ந்து நிலம் மெழுகி அறுகு நடல், பிரண்டை நடல் என்பனவும் செய்வர். இறந்தவரை எரியூட்டிய மறுநாள், அல்லது புதைத்த மறுநாள் நன் காட்டில் செய்யும் கடன்கள் இவையாம். மற்றையிடங்களில் எரியும் தீயை ஆற்றல் “அணைத்தலாம்.” “தீயணைப்பு” என்பது அறிக.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்