Skip to content

சொல் பொருள்

(பெ) 1. குற்றம், 2. தூசி, 3. பூந்தாது,

சொல் பொருள் விளக்கம்

1. குற்றம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fault, dust, pollen

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 26

முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில்

அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர்
– சிறு 200,201

தலைமைச் சிறப்புடைய யானைகளின் (மத)அருவி (எழுந்த)தூசியை அணைத்துவிடுவதால்
புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்

தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி – நற் 270/2,3

பூஞ்சோலை மலர்களின் மணங்கமழும், வண்டுகள் மொய்க்கின்ற நறிய மணத்தையுடைய,
இருளைப் போன்ற கூந்தல்களில் உள்ள மிகுதியான பூந்துகள்களில் மூழ்கியெழுந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *