சொல் பொருள்
(வி) 1. சிக்கவை, அகப்படுத்து, 2. பிணி, கட்டு
சொல் பொருள் விளக்கம்
1. சிக்கவை, அகப்படுத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
entangle, entrap, bind, tie
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை தூண்டிலா விட்டு துடக்கி தான் வேண்டியார் நெஞ்சம் பிணித்தல் தொழிலா திரிதரும் நுந்தை பால் உண்டி சில – கலி 85/22-25 பொய்யாகப் போர்த்துக்கொண்ட பாணர் தொழிலை மேற்கொண்ட அந்தச் சகல கலா வல்ல இழிஞனைத் தூண்டிலாகப் பயன்படுத்திச் சிக்கவைத்துத் தான் விரும்பியவரின் நெஞ்சத்தைக் கவர்வதையே தொழிலாகக் கொண்டு திரியும் உன் தந்தைக்குரிய பாலையும் கொஞ்சம் உண்பாய்! விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கை குறும் தொடி துடக்கிய நெடும் தொடர் விடுத்தது உடன்றனள் போலும் நின் காதலி – அகம் 176/15-18 விழாவில் ஆடும் மகளிரொடு தழுவிஆடும் அணியால் பொலிவுற்று மலரைப் போன்ற மையுண்ட கண்ணினையும் மண்புற்ற அணியினையும் உடைய நின் பரத்தை தனது குறிய வளை அணிந்த முன்கையினால் பிணித்த நெடிய பிணிப்பினை விடுத்துச் சென்ற அளவுக்கே வெகுண்டனள் போலும் உன் காதலி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்