சொல் பொருள்
துணியைக் கிழித்தல் – கிறுக்காதல்
சொல் பொருள் விளக்கம்
“சீலையைக் கிழித்தல்” என்னும் வழக்குப் போல்வது. துணி என்பது துண்டித்தல் என்னும் பொருளில் வருவது எனினும், அதனை முழுமையான சீலை, வேட்டி, துண்டு என்னும் பொருளாகக் கொண்டு அதனைக் கிழித்தலைக் குறித்ததாம். “நான் என்ன துணியைக் கிழித்துக் கொண்டா திரிகிறேன்” என்பதில் “நான் கிறுக்கா?” என்னும் வினாவுண்மை காண்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்