சொல் பொருள்
துண்டம் – துண்டு துண்டாக அமைந்தது துண்டம் ஆகும்.
துள்ளம் – துண்டத்தின் இடை இடையே அமைந்த சிறு வட்டங்கள் துள்ளம் எனப்படும்.
சொல் பொருள் விளக்கம்
ஒருவர் நிலப்பரப்பில் ஒரு பகுதி துண்டம் அல்லது துண்டு என்று அழைக்கப்படும். அத்துண்டின் ஊடே சில பகுதிகளிலுள்ள பயிர்கள் கருகியோ வாடியோ போயிருந்தால் துள்ளம் துள்ளமாக கருகியோ வாடியோ போயிருப்பதாக வழக்காறு.
துளி, துள்ளி, துள்ளம் என்பவை ஒரு பொருளன. துளியின் சிறுமை மழைத் துளியால் தெரியவரும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்