சொல் பொருள்
(வி) 1. தோய், படி, 2. செறிந்திரு, அடர்ந்திரு, 3. நெருங்கியிரு, 4. கூட்டமாயிரு
சொல் பொருள் விளக்கம்
1. தோய், படி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be steeped saturated, be dense, thick, be close, be crowded
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம் – கலி 56/16 கல்லுண்டு வாழும் புறா என்று கூறும்படியாகத் தோய்ந்து படிந்திருக்கும் உன் எழில் நலம் துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் – புறம் 391/16 செறிந்திருக்கும் தூவியையுடைய அழகிய புதா என்னும் பறவை தங்கும் மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும் எருத்து இடை அடங்கியும் இமில் இற புல்லியும் தோள் இடை புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும் – கலி 105/30-32 கொம்புகளைப் பிடித்துக்கொண்டும், மார்பில் ஏந்தித்தாங்கிக்கொண்டும், கழுத்தைக் கட்டிக்கொண்டும், திமில் இற்றுப்போய்விடுமோ என்னும்படி தழுவிக்கொண்டும், தோள்களுக்கு நடுவே கழுத்தைப் புகவிட்டுப் பிடித்துக்கொண்டும், நெருங்கி நின்று குத்துக்களைத் தாங்கியும், துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப – கலி 33/5 தெளிந்த குளத்து நீருக்குள் தெரியும் பூக்களின் உருவத்தைக் கண்டு, அவற்றைச் சுற்றிக் கூட்டமாய் வண்டுகள் ஒலியெழுப்ப,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்