சொல் பொருள்
(வி) விரைந்து வரு(தல்),
சொல் பொருள் விளக்கம்
விரைந்து வரு(தல்),
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
coming fast
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் கால் உறழ் கடும் திண் தேர் கடவினர் விரைந்தே – கலி 33/30,31 மாலை தொங்கும் அகன்ற மார்பினையுடைய அவர் விரைந்து வருகிறார், காற்றைப் போன்று கடுமையாய் விரையும் தன் திண்ணிய தேரினைச் செலுத்திக்கொண்டு இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை துனி கொள் துயர் தீர காதலர் துனைதர ——————————————————————- இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 120/ 20-25 ஓடி ஒளிந்துகொள்வதற்கு ஓர் இடம் இல்லாதபடி அலைத்துத் துன்பமே செய்கின்ற இந்த மாலைக் காலம், வெறுப்பால் வந்த துயரம் தீரும்படி, காதலன் விரைந்து வந்துசேர, ——————————————————————– இல்லாமல் போய்விட்டது இருளிடையே மறைந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்