Skip to content

சொல் பொருள்

(வி) 1. ஓட்டிச்செலுத்து, 2. ஊக்கு, தூண்டு, 3. ஆழமாக எய், எறி, 4. முன்னால் தள்ளு,  5. செயல் முனைப்புக்கொள்,

சொல் பொருள் விளக்கம்

1. ஓட்டிச்செலுத்து, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

drive with greater speed, urge, encourage, shoot deeply as an arrow, spear, push forward, endeavour, make efforts

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துனை பரி துரக்கும் செலவினர் – முல் 102

விரைந்து செல்லும் பரியைக் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையவரின்

கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டி
பின் நின்று துரக்கும் நெஞ்சம் – அகம் 3/12,13

அணிகலன்கள் ஈட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்துசெல்வதாகக் காட்டி
பின்னால் இருந்து ஊக்கும் நெஞ்சமே!

பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து – புறம் 274/2,3

மயில்பீலியால் தொடுக்கப்பட்ட கண்ணியினையுடைய பெருந்தகையாகிய மறவன்
தன் மேல்கொலைகுறித்து வந்த களிற்றின் நெற்றியிலே வேலைச் செலுத்திப் போக்கி

அருவி சொரிந்த திரையின் துரந்து
நெடு மால் கருங்கை நடு வழி போந்து – பரி 20/103,104

அருவி சொரிந்த பூக்களை வையையாறு தன் நீரலைகளினால் தள்ளிக்கொண்டுவந்து,
நீண்ட பெரிய நிலத்தடி வழியாக நீரின் நடுவழியே கொண்டு சென்று

குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து
ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது
துனை பரி துரக்கும் துஞ்சா செலவின் – அகம் 9/14-16

குன்றுகள் பின்னிட முன்னே செல்ல, மனஉறுதியுடன் முனைப்புக்கொண்டு,
ஞாயிறு மறைந்தாலும், ஊர் வெகுதொலைவில் உள்ளது என்று சொல்லாமல்,
வேகமாக ஓடும் குதிரைகளை மேலும் முடுக்கிவிட்டுச் சோர்வின்றிப் பயணம்செய்யும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *