சொல் பொருள்
(பெ) முடுக்கி உட்செலுத்துதல்
துரப்பு என்பது துடைப்பத்தைக் குறிக்கும் சொல்லாகக் குமரி வட்டார வழக்கில் உள்ளது.
சொல் பொருள் விளக்கம்
துடைப்பு துடைப்பம் என்பவை வாரியலைக் குறிக்கும், பொது வழக்குச் சொல். துரப்பு என்பது துடைப்பத்தைக் குறிக்கும் சொல்லாகக் குமரி வட்டார வழக்கில் உள்ளது. தூர்த்தல் (தூர்ப்பு) என்பது பெருக்குதலைக் குறிக்கும். தூர்ப்பு > துரப்பு. ஆகியிருக்கும். துடைப்பு துரப்பு ஆகாது. துடப்பு, தொடர்பு என்றே ஆகும். தூர்த்துக்குடி (தூத்துக்குடி) மேடாக்கப் பட்டு அமைந்த ஊர். தூர்தல். காது தூர்தல் = காதுத் துளை. மூடிப்போதல். “தூர்வை அள்ளல்” உழவர் பணிகளுள் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
driving in, hammer down, as a nail;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி – பொரு 10 (பத்தலிரண்டும் சேர்த்தற்குத் திறந்த)துளைகளின் வாய் மறைய முடுக்குதலமைந்த ஆணியினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்