Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஆற்றில்/கடலில் இறங்கும் இடம், 2. ஆற்றில்/கடலில் இறங்கி நீராடும் இடம், நீர்த்துறை, 3. பகுதி, பிரிவு, வகைமை, 4. துறைமுகம், 5. சலவைசெய்வோர் ஆற்றில் துவைக்கும் இடம், 6. ஆடல்துறை

சொல் பொருள் விளக்கம்

1. ஆற்றில்/கடலில் இறங்கும் இடம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

place where one gets into a river/sea, bathing ghat, branch, field, category, port, riverside where washermen wash the clothes, faculty of dance

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறை_துறை-தோறும் பொறை உயிர்த்து ஒழுகி – பொரு 238,239

நறைக்கொடியும், நரந்தம் புல்லும், அகிலும், சந்தனமும்,
துறைகள்தோறும் துறைகள்தோறும், (தனக்குச்)சுமையானவற்றை ஒதுக்கி, இளைப்பாற நடந்து

துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய – சிறு 117

(நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி

பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் – சிறு 228,229

பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை

இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும்
துறை பிறக்கு ஒழிய போகி – பெரும் 349-351

இரவில் கொளுத்தின விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து
பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும் 350
துறை பின்னே கிடக்க (கடந்து) போய்

துறை செல்லாள் ஊரவர்
ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி – கலி 72/13,14

துறைக்குச் செல்லாதவளாய், ஊரினரின்
ஆடைகளை சேர்த்துக்கொண்டு வெளுக்கின்ற உன் வண்ணாத்தி

காவில் தகைத்த துறை கூடு கலப்பையர் – பதி 41/5

காவடியின் இரு பக்கங்களிலும் சரியாகக் கட்டப்பட்ட, ஆடல்துறைக்கு வேண்டிய கலங்களைக் கொண்ட பையினராய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *