சொல் பொருள்
துளையில் இருந்து வெளியேறி வாய்க்காலுக்கு நீர்வருவதால் வாய்க்காலைத் துளைக்கால் என்றனர்
சொல் பொருள் விளக்கம்
வாய்க்கால் என வழங்கப்படும் பொது வழக்குச் சொல் தஞ்சைப் பகுதியில் துளைக்கால் என வழங்கப்படுகிறது. நீர் தேங்கிய குளம், ஏரி முதலியவற்றில் இருந்து நீரை வெளியேற்றிப் பயிருக்குப் பாய்ச்சுதல் வழக்கம். நீர் வெளியேறும் மடையில் துளைகள் உண்டு. அதனை அடைக்கவும் திறக்கவும் துடுப்பு அல்லது அடைப்பு உண்டு. துளையில் இருந்து வெளியேறி வாய்க்காலுக்கு நீர்வருவதால் வாய்க்காலைத் துளைக்கால் என்றனர். துளை, கண் எனப்படும் ஆதலால், கண்வாய் என்பதும் அது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்