சொல் பொருள்
துள்ளல் – காலும் கையும் நடுங்கி மேலும் கீழும் ஏறி இறங்கல்.
துடித்தல் – மூச்சுப் படபடத்து ஏறி இறங்கல்.
சொல் பொருள் விளக்கம்
“துள்ளத் துடிக்க அடித்து விட்டான்” என்பது ஒரு குறைபாடு. ‘சின்னது நணியதுகளைத் துள்ள துடிக்கவா செய்வார்கள்?” என்பது இரங்கல் வழிவந்த வசைமொழி.
துள்ளுதல் – நிற்கும் அல்லது இருக்கும் நிலையில் இருந்து மேலே, எழுந்து வீழ்தல். மீன்துள்ளல் அறிக. ‘துள்ளுவதைக் காணவே’ கொலை செய்த கொடுமையாளரும் உளரல்லரோ! துள்ளு நடைப்புறவைக் கண்டு வியந்திருக்கிறான் ஒரு புலவன். பிறர் துயருக்காகத் துடிப்பவர் மனித வடிவினர் எனினும் தெய்வ நிலையரே!
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்