சொல் பொருள்
தூக்கம் என்பது உயரம் என்னும் பொருளிலும் கூடுதல் என்னும் பொருளிலும் நெல்லை வழக்கில் உண்டு.
சொல் பொருள் விளக்கம்
உறக்கம் என்னும் பொருளில் தூக்கம் என வழங்குதல் உண்டு. தூக்கம் என்பது உயரம் என்னும் பொருளிலும் கூடுதல் என்னும் பொருளிலும் நெல்லை வழக்கில் உண்டு. தூக்குவது மேலெடுத்தலாதல் உயரப் பொருள் தந்தது. உரிய அளவிலும் மிகுதியாதலைத் தூக்கு என்பர் அது, இனிப்பு தூக்காக உள்ளது என்பது போன்றவற்றில் வழங்கும். அது தூக்கம் எனப்படாமல் ‘தூக்கு’ என நிற்கும். தூக்கு என்பது துணிகாயப்போடும் கொடிக் கயிற்றுக்குப் பெயராகப் பழனி வட்டார வழக்கில் உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்