Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தொங்குதல், 2. தூக்கக் கலக்கம்,  3. வாளாவிருத்தல், சோம்பியிருத்தல், 4. ஆடுதல்,  5. ஒரு சங்க காலப் புலவர், 

சொல் பொருள் விளக்கம்

1. தொங்குதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

suspension, drowsiness, being idle, dancing, a poet of sangam age

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை – நற் 135/1

தொங்குதலையுடைய ஓலைகளையும், உயர்ந்து நீண்ட மடல்களையும் கொண்ட பனைமரத்தின்

துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை
பெரு மூதாளர் ஏமம் சூழ – முல் 53,54

(தலைமயிரைத்)துணியால் கட்டிச் சட்டையிட்ட, தூக்கக்கலக்கத்திலும் விரைப்பான நடையுடைய
மிக்க அனுபவமுடையோர் (மெய்க்காப்பாளராகக்)காவலாகச் சூழ்ந்து திரிய

பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் – நற் 258/8,9

பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை,
கடலில் செல்லாது வாளாவிருக்கும் தோணியின் பாய்மரக்கூம்பினில் சென்றுதங்கும்

வல்லோன்
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின் – அகம் 98/19,20

வல்லோன்
ஆட்டும் பொறி அமைந்த பாவையைப்போல ஆடுதலை விரும்பின்

தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை – அகம் 227/16

தூங்கல் என்னும் புலவரால் பாடப்பெற்ற மிக உயர்ந்த நல்ல புகழ்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *