சொல் பொருள்
(பெ) 1. கூழாங்கல், 2. ஒருவரிடமிருந்து மற்றவருக்குக் கொண்டுசெல்லும் செய்தி,
சொல் பொருள் விளக்கம்
1. கூழாங்கல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pebble, message
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தூதுஉண்அம்புறவொடு துச்சில் சேக்கும் – பட் 58 கூழாங்கல்லை உண்பதாகக் கருதப்படும் தூதுணம்பறவையுடன் ஒழிவிடத்தில் தங்கும் தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர் காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று – பரி 8/36,37 தலைவியரால் தூதாக ஏவிவிடப்பட்ட வண்டுக் கூட்டத்தின் இனிய இசை, அவர்களின் காதல் பெருக்கத்தைப் பழமையான மதுரையின் மதிலோரத்து மக்கள் அறிந்துகொள்ளும் ஆரவாரமாயிற்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்