Skip to content

சொல் பொருள்

(பெ) விளையாட்டுக்கு உதவும் சிறிய மரப்பானை, 

முகத்தலளவைப் பெயர்களுள் ஒன்று

சிறுபானை

சொல் பொருள் விளக்கம்

தூதை என்பது தொல்பழங்கால முகத்தலளவைப் பெயர்களுள் ஒன்று. தொல்காப்பிய உரையாசிரியர்கள் தூதை என்பதைக் காட்டுவர். கலம் என்பதும் அளவைப் பெயரே. தூதை, சிறுபானைக்குப் பெயராகக் கருங்கல் வட்டார வழக்கில் இருப்பது, தென்னகத் தமிழின் தொல் பழஞ் சான்றையும், பழமை போற்றும் வெளிப்படுத்தும்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Toy utensils of wood;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துடுப்பு என புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட – கலி 59/4-6

துடுப்பு என்று ஒப்புமை கூறும்படியாக உன் திரண்ட, தம்மில் ஒன்றாக அமைந்த, மென்மையான முன்கையினால்
ஒளி படரும் வேலைப்பாடு மிக்க மரத்தால் செய்த சிறு பானையாலும், பாவையாலும்
விளையாடுவதற்கு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *