Skip to content

சொல் பொருள்

(பெ) 1. உள்துளை, 2. உள்துளையுள்ள ஒரு பொருள், மூங்கில் குழாய், 3. முங்கிலினாலான நெடுவங்கியம் என்னும் இசைக்கருவி

சொல் பொருள் விளக்கம்

1. உள்துளை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

tubularity, any tube like a bamboo tube, A flute made of bamboo ;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல்
பாம்பு – திரு 148-150

நஞ்சுடன் மறைந்திருக்கும் உள்துளையுடைய வெண்மையான பல்லினையும், நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய, பாம்புகள்

தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி – பதி 81/21

மூங்கில் குழாயினுள்ளே முதிர்வடைந்த இனிய கள்ளினை நிறைய அருந்தி,

இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 7

இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *