Skip to content

சொல் பொருள்

(வி) 1. மூடு, அடை, மேடாக்கு, 2. அடைபடு, 3. மிகுதியாகப் பொழி,  4. நிரம்பு,

2. (பெ) பனையின் வேர்ப்பற்றுள்ள அடிப்பகுதி, 

சொல் பொருள் விளக்கம்

மூடு, அடை, மேடாக்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fill up, close up as a well, be blocked, closed, To pour forth in showers, as arrows;, be filled up, Root-like formation about the stump of palmyras

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர்
ஊறாது இட்ட உவலை கூவல்
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து
இரும் களிற்று இன நிரை தூர்க்கும் – அகம் 21/22-26

வலிய வாயையுடைய கோடலியையுடைய கூழ் குடிக்கும் கிணறுதோண்டுவோர்
(நீர்) ஊறாமையால் விட்டுவிட்டுச் சென்ற சருகுகள் நிறைந்த பள்ளங்களை,
தந்தங்களை விரும்பிய கடின மனம் படைத்த கானவர்
எளிதாக எண்ணி நடக்கும் வழிகளில் தோண்டிய குழிகள் என்று எண்ணி
பெரிய ஆண்யானையைக் கொண்ட யானைக்கூட்டம் மூடி மேடாக்கும்

இல்லி தூர்த்த பொல்லா வறு முலை – புறம் 164/4

துளை அடைத்துப்போன பொல்லாத வறிய முலையை

முன்றில் பலவின் படு சுளை மரீஇ
புன் தலை மந்தி தூர்ப்ப – நற் 373/1,2

வீட்டு முற்றத்தில் உள்ள பலாமரத்தின் பழுத்துள்ள சுளைகளைக் கையால் வளைத்து,
புல்லிய தலையைக் கொண்ட மந்தி உண்டபின் கொட்டைகளைக் கீழே உதிர்க்க

கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் – நற் 228/3

கண்கள் தூர்ந்துபோகுமாறு பரந்த, மிக்க இருள் பரவிய நள்ளிரவில்

நிலை தொலைபு வேர் தூர் மடல்
குருகு பறியா நீள் இரும் பனை மிசை – பரி 2/42,43

தமது நிலை கெட்டு, வேரும் தூரும் மடலும்
குருத்தும் பறிக்கப்படாத உயர்ந்த கரிய பனைகளின் உச்சியிலிருக்கும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *