சொல் பொருள்
(பெ.அ) தெளிந்த,
தெள் + கடல் > தெண் கடல்
சொல் பொருள் விளக்கம்
தெளிந்த,
வல்லின, மெல்லின மெய்கள் முன்னால் வரும்போது தெள் என்பது தெண் என்றாகிறது.
தெள் என்பது தெளிவு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Clear, transparent,
only in combin. for தெள், as in
தெள் + கடல் > தெண் கடல்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெண் கடல் குண்டு அகழி – மது 86 செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/13 தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் – மது 519 தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26 ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும் – நற் 85/1 அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி – மது 94
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்