சொல் பொருள்
புடைத்தல் வகையுள் தெள்ளுதல் ஒன்று. கொழித்தல் மற்றொன்று
சொல் பொருள் விளக்கம்
தவசம், பருப்பு, மாவு, முதலியவற்றை முறத்தில் பரப்பி மேலும் கீழும் பக்கமும் அகற்றிக் கல், மண், தூசி, பூச்சி, புழு முதலியவற்றை அகற்றுதல் தெள்ளுதலாம். தெள்ளுதல் தெளிவாகக் கண்டு விலக்குவ விலக்கல். தெள்ளிய அறிவு, ‘தெள்ளிய ஆல்’, ‘தெள்ளத் தெளிவாக’ வழக்கு மொழிகள். கொழித்தல் என்பது முறத்தின் இக்கரையில் இருந்து அக்கரைக்கும் அக்கரையில் இருந்து இக்கரைக்கும் தள்ளி ஒட்டிய தவிடு, நொய் முதலியவற்றை அகற்றிக் கொழுமைப் படுத்ததலாம். இரண்டும் புடைத்தல் வழிப்பட்டவையே. நாவுதல், நீவுதல் என்பவும் அவ்வகையவே.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்