Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வாய் குதட்டுதலால் உண்டாகும் விலாழி(வாய்நுரை) நீர்,

2. ஒலியெழுப்புதல்

சொல் பொருள் விளக்கம்

வாய் குதட்டுதலால் உண்டாகும் விலாழி(வாய்நுரை) நீர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Foam from a horse’s mouth

making noise

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கால் கடுப்பு அன்ன கடும்செலல் இவுளி
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் உணங்குவன – அகம் 224/5-8

காற்றின் வேகத்தை ஒத்த விரைந்த ஓட்டத்தினை உடைய குதிரைகளின்
பாலைக் கடையும்போது எழும் வெண்ணெயின் பெரிய மிதப்பினைப் போன்ற
மிக வெண்மையான வாயின் தெவிட்டலாய் பின்னே வழிந்திடும் மெல்லிய நுரை
சிலந்தியின் நூல் போல நுணுகுவனவாய்ச் சிதறி

பாணி பிழையா மாண் வினை கலிமா
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி
நெடும் தேர் அகல நீக்கி – அகம் 360/11-13

தாளத்தை ஒத்து நடத்தல் தப்பாத மாண்புற்ற வினை வல்ல செருக்குறும் குதிரை
ஊர் துயிலும் யாமத்தில் ஒலித்தலைத் தவிர்த்து,
நீண்ட தேரினைத் தூரத்தே நீக்கி நிறுத்தி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *