சொல் பொருள்
(வி) கொள், (பெ) பகை, பகைவர்,
சொல் பொருள் விளக்கம்
கொள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
get, take, obtain
enmity, enemy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் தெவ்வு நிரை தொழுவர் – மது 89 நீரினை முகக்கும் (ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள் தெவ்வு குன்றத்து திருந்து வேல் அழுத்தி – பரி 19/102 பகைமை பொருந்திய கிரவுஞ்ச மலையில் உன் திருத்தமான வேலினைப் பாய்ச்சி திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி – சிறு 246 வலிமை பொருந்திய வெற்றியோடே பகைவரின் நிலத்தைக் காலிசெய்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்