சொல் பொருள்
தேசிக்காய் என இலாமிச்சைக் காயை வழங்குதல் இலந்தைக்குள வட்டார வழக்காகும்.
சொல் பொருள் விளக்கம்
தேசி என்பது தேசத்தான் தேசத்தது என்னும் பொருளது. இலாமிச்சை எனப்படும் எலுமிச்சை வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தமையால் வேறு தேசத்தில் இருந்து வந்தது என்னும் பொருளில் தேசி எனப்பட்டது. தேசிக்காய் என இலாமிச்சைக் காயை வழங்குதல் இலந்தைக்குள வட்டார வழக்காகும். அயல் தேசத்தான் பரதேசி எனப்படுதலும், மண்ணெண்ணெய் சீமை எண்ணெய் எனப்படுதலும் கருதத்தக்கவை.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்