சொல் பொருள்
தேனாக ஒழுகுதல் – (வஞ்சமாக) இனிக்க இனிக்கக் கூறல்
சொல் பொருள் விளக்கம்
“வாய் கருப்புக்கட்டி; கை கடுக்காய் “என்பதும், உள்ளத்திலே வேம்பு உதட்டிலே கரும்பு” என்பதும் பழமொழிகள். தேன் ஒழுகுதல் போல இனிக்க இனிக்கப் பேசுதலைக் குறித்தாலும், உள்ளே வஞ்சகம் உண்மையால் பெருந்தீமை பயப்பதேயாம். “உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்னும் வள்ளலார் வாக்கு தேனாக ஒழுக விடுவாரின் தேர்ச்சி நிலையைத் தெளிவிக்கும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்