சொல் பொருள்
தேய்த்துப்போட்டகல்- இழிவுறுத்தல், அருவறுத்தல்
சொல் பொருள் விளக்கம்
காலில் ஏதாவது படக் கூடாத அருவறுப்புப் பட்டுவிட்டால் கண்ணில் காணப்பட்ட கல்லில் காலைத் தேய்த்து ஓரளவு அருவறுப்பைத் துடைத்துக் கொள்ளுதல் நடைமுறை. அத் தேய்த்தலுக்கும் எல்லாக் கல்லையும் பயன்படுத்த முடியாது. கேட்பாரற்றதும் கருதுவாரற்றதுமாகிய கல்லிலேயே தேய்ப்பர். அத்தகைய கல்லைப் போலச் சிலரை இழிவு படுத்தினால், “என்னைத் தேய்த்துப் போட்ட கல்லைப்போல நினைக்கிறான்; அவனை மதித்து நானென்ன பார்ப்பது” என வெறுத்துரைத்தல் வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்