சொல் பொருள்
தேய்த்துவிடுதல் – ஏமாற்றி இல்லையெனல்
சொல் பொருள் விளக்கம்
இல்லை என்று வாயால் சொல்லாமல் பல்கால் அலையவிட்டு அவர்களே உண்மையறிந்துகொண்டு ஒதுங்க விடுதல் தேய்த்து விடுதலாம். தேய்த்து விடுதல் ஏய்த்து விடுதல் போல்வதென்க. எண்ணெய் தேய்த்தல் தேய்த்து குளிப்பாட்டல் என்பவற்றைக் கருதினால் தேய்த்து விடுதல் இன்பப்படுத்துதலும், அப்படியே குளிப்பாட்டுதல் ஏமாற்றுதலும் ஆகிய பொருள்களைத் தருவதாக அமையும். “குளிப்பாட்டல்”, என்னும் வழக்கை அறிக. “பேச்சிலேயே குளிப்பாட்டி விடுவானே அவனுக்குத் தண்ணீர் எதற்கு?” என்பதும் இப்பொருளை விளக்கும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்