சொல் பொருள்
1. (வி) 1. தேடு, 2. நாடிச்செல், 3. ஆராய், 4. எண்ணிப்பார், சிந்தி, 5. தெளிவுகொள், உறுதிப்படுத்து,
2. (பெ) 1. இரதம், 2. சிறு பிள்ளைகள் இழுத்து விளையாடும் விளையாட்டு வண்டி, 3. கானல்,
சொல் பொருள் விளக்கம்
தேடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
search for, seek, examine, ponder, deliberate, ascertain, chariot, mirage
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்து என – பெரும் 313 இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் – கலி 74/10,11 முற்பகலில் ஒருத்தியிடம் சேர்ந்திருந்து, உச்சிவேளையில் அவளை விட்டுப் பிரிந்து பிற்பகலில் வேறொருத்தியை நாடிச் செல்லும் உன் நெஞ்சமும் பைத்தியம்பிடித்தது சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் தேரும்_கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/15-17 சிறப்புப் பொருந்திய வெண்மையான முத்துக்கள் அவற்றை அணிபவர்க்கன்றி, அவை நீருக்குள்ளே பிறந்தாலும் நீருக்கு அவை தாம் என்ன செய்யும்? ஆராய்ந்துபார்த்தால் உமது மகள் உமக்கும் அதனைப் போன்றவள்தான்; ஏர் அணி இலங்கு எயிற்று இன் நகையவர் சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை_தன் நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என தேருநர் தேரும்_கால் தேர்தற்கு அரிது காண் – பரி 22/31-34 அழகிய வரிசையாய் ஒளிரும் பற்களையும், இனிய புன்முறுவலையும் உடைய மகளிரும், இயற்கை அழகினையுடைய வையைக்கு அழகாய் அமைந்தாரோ? வையையின் நீரால் அழகுற்ற வெள்ளம் இவருக்கு அழகு தந்ததோ? என்று தெளிந்தறிய முயல்வோர் எண்ணிப்பார்த்தால் தெளிந்துகொள்வதற்கு அரிதாகும், ஏர் அணி இலங்கு எயிற்று இன் நகையவர் சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை_தன் நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என தேருநர் தேரும்_கால் தேர்தற்கு அரிது காண் – பரி 22/31-34 அழகிய வரிசையாய் ஒளிரும் பற்களையும், இனிய புன்முறுவலையும் உடைய மகளிரும், இயற்கை அழகினையுடைய வையைக்கு அழகாய் அமைந்தாரோ? வையையின் நீரால் அழகுற்ற வெள்ளம் இவருக்கு அழகு தந்ததோ? என்று தெளிந்தறிய முயல்வோர் எண்ணிப்பார்த்தால் தெளிந்துகொள்வதற்கு அரிதாகும், வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 489/5 வளமையான குதிரைகள் பூட்டிய நெடிய தேரினைச் செலுத்துவாயாக, விரைந்து. ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர் – பெரும் 249 (ஏறி)ஊரப்படாத நல்ல சிறு தேரை உருட்டிக்கொண்டு திரிந்த பிள்ளைகள் இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் – கலி 24/10 குத்தும் கொம்புகளையுடைய யானை தூரத்தே ஒளிர்கின்ற கானல்நீருக்காக ஓடும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்