சொல் பொருள்
(பெ) 1. ஆரம்பித்தல், 2. ஆதிசிருஷ்டி,
சொல் பொருள் விளக்கம்
ஆரம்பித்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
beginning, first creation
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு பூசல் ஆயம் புகன்று இழி அருவி – குறு 367/4,5 இறங்கிவரும் பெரிய மழை பெய்ய ஆரம்பித்ததால், அவர் நாட்டிலுள்ள ஆரவாரத்தையுடைய மகளிர்கூட்டம் விரும்பி இறங்கும் அருவியினால் தொடங்கல்கண் தோன்றிய முதியவன் முதலாக – கலி 2/1 உலகம் உருவாகும் காலத்தில் தோன்றிய முதியோனாகிய நான்முகன் முதலாக,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்