சொல் பொருள்
1. (வி.எ) 1. தொடர்ந்து, 2. தொடுத்து, 2 (பெ) ஒரு முட்செடி வகை, அதன்பழம்,
சொல் பொருள் விளக்கம்
1. தொடர்ந்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
continuously, fastening, a thorny straggling shrub, its fruit
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேரும் முதலும் கோடும் ஓராங்கு தொடுத்த போல தூங்குபு தொடரி கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் – குறு 257/1-3 வேரிலும், அடிமரத்திலும், கிளையிலும் ஒன்றுபோல் தொடுத்து வைத்தைதைப் போன்று தொங்கித் தொடர்ந்து கீழே தாழ்ந்தாற்போன்ற தணிந்த குலைகளைக் கொண்ட பலாமரங்களையுடைய புதல் மிசை நறு மலர் கவின் பெற தொடரி நின் நலம் மிகு கூந்தல் தகை கொள புனைய – ஐங் 463/1,2 புதரின் மேல் பூக்கும் நறிய மலர்களை அழகுபெறத் தொடுத்து, உன் வனப்பு மிகுந்த கூந்தல் பொலிவுபெறுமாறு சூட்டிவிட வள்ளத்து இடும் பால் உள் உறை தொடரியொடு – புறம் 328/7 வள்ளத்தில் பெய்து உண்ணப்படும் பாலினது உள்ளே உறைந்த தயிரும் தொடரிப்பழமும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்