சொல் பொருள்
தொடர்பு – நட்பு, பாலுறவு
சொல் பொருள் விளக்கம்
தொடு, தொடர், தொடர்பு என்பவை நெருக்கம் காட்டும் சொற்கள். பழக்கத்தாலும், உறவாலும் தொடர்பைக் குறியாமல் அதற்கு மேலும் வளர்ந்து பாலுறவுப் பொருளாகவும் வழக்கில் உள்ளது. அவனுக்கும் அவளுக்கும் நெடுங்காலமாகத் தொடர்பு என்னும் வழக்கு அதனைக் காட்டும். ஆனால் இத்தொடர்பு முறையல் முறையாய் ஏற்பட்டது என்பது அறியத்தக்கது. “சான்றோர் தொடர்பு” ‘நட்பாம் தொடர்பு’ என்பவற்றுக்கும் விலக்காம். இத்தொடர்புக்கும் உள்ள எதிரிடைப் பொருள் பெரிதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்