சொல் பொருள்
(வி.எ) தொடு என்பதன் பெயரெச்சம்
1. தொட்ட – தீண்டிய,
2.தொட்ட– தோண்டிய,
3.தொட்ட – வெட்டிய, கத்தரித்த,
4.தொட்ட – தரித்த, அணிந்த,
5. தொட்ட – துளைத்த
6. தொட்ட – தொடுத்த, செலுத்திய ,
7. தொட்ட – ஆணையிட்ட
சொல் பொருள் விளக்கம்
தொடு என்பதன் பெயரெச்சம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
touched
dug, scooped out, scissored, put on as a ring or dress, pierced, discharged, swore
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர் – பதி 49/10 இரத்தத்தைத் தொட்டதால் சிவந்த கையையுடைய மறவர்களின் கலை கை தொட்ட கமழ் சுளை பெரும் பழம் – குறு 342/1 ஆண்குரங்கு கையால் தோண்டிய கமழ்கின்ற சுளையைக் கொண்ட பெரிய பலாப்பழத்தை எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால் போல் – கலி 32/1 கத்தரிக்கோலால் இடையிடையே வெட்டப்பட்ட கார்மேகத்தின் அழகினைப் பெற்ற கூந்தலைப் போல் சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட மோதிரம் யாவோ யாம் காண்கு – கலி 84/20,21 விருப்பம்போல் திரிபவனே! அந்தப் பரத்தையரின் கையிலுள்ளதை, என்னை இகழும்படியாக நீ அணிந்திருக்கும் மோதிரங்கள் எவை? நான் பார்க்கிறேன்! தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி தங்கார் பொதுவர் – கலி 106/23,24 துளைபட்ட தம் புண்ணிலிருந்து ஒழுகுகின்ற குருதியைக் கையால் துடைத்து, உடம்பிலும் தடவிக்கொண்டு, சற்றும் தாமதிக்காமல் அந்த இடையர், நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் – கலி 108/6,7 எள்ளி நகைக்கத்தக்கவன் நான் என்று என் உயிர்போகும்படி காமக்கணைகளைத் தொடுத்த கொடுமையுடையவளே! உனக்கு என்ன பிழைசெய்தேன், பெண்ணே! நான்?” பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி – நற் 378/10 அன்பு மிகும்படி ஆணையிட்டுக்கூறிய மெல்லிய சூளுரையை மெய்யென விரும்பிக்கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்