சொல் பொருள்
(பெ) ஒன்பது,
தொண்டு என்பது துளை, பணிசெய்தல், அடிமை என்னும் பொதுப் பொருளில் வழங்கும்.
சொல் பொருள் விளக்கம்
தொண்டு என்பது துளை, பணிசெய்தல், அடிமை என்னும் பொதுப் பொருளில் வழங்கும். அது, அடைப்பின் ஊடு புகுந்து செல்லும் வழி அல்லது பாதைக்குப் பெயராக நெல்லை வழக்கில் உள்ளது. தொண்டுவழி என்பதும் அது. தொண்டு = துளை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
nine
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79 ஆறாவதான மனத்தைச் சேர்த்த அறிகருவிகள் ஆறும், ஏழாவதான ஆணவமும், எட்டாவதான புத்தியும், ஒன்பதாவதான மூலப்பகுதியும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்