சொல் பொருள்
(வி) 1. அழி, இற, 2. காணாமல் போ, 3. தீர்ந்துபோ, 4. வருந்து, 5. தோல்வியடை, 6. அழி, இல்லாமல் செய், 7. கொல், 8. காணாமற்போக்கு, 9. தோல்வியடையச் செய்,
சொல் பொருள் விளக்கம்
அழி, இற,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
perish, die, be lost, be exhausted, suffer, be defeated, destroy, kill, cause to be lost, defeat, vanquish
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொருது தொலை யானை கோடு சீர் ஆக – மலை 154 (தம்மில்)போர்செய்து இறந்த யானைகளின் தந்தங்கள் காவுத்தண்டாக, தொல் கவின் தொலையினும் தொலைக – நற் 350/5 பழைய அழகு காணாமற்போனாலும் போகட்டும்; வரகும் தினையும் உள்ளவை எல்லாம் இரவல் மாக்களுக்கு ஈய தொலைந்தன – புறம் 328/3,4 வரகும் தினையும் என உள்ளவை எல்லாம் இரவலர்க்குக் கொடுத்ததனால் தீர்ந்து போயின பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து முலை கோள் மறந்த புதல்வனொடு மனை தொலைந்திருந்த என் வாள்_நுதல் படர்ந்தே – புறம் 211/20-22 பால் இல்லாமையால் பலமுறை சுவைத்து மார்பின்கண் உண்ணுதலை வெறுத்த பிள்ளையோடு வீட்டில் வறுமையினால் வருந்தியிருக்கும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய என் மனைவியை நினைந்து போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல் – கலி 120/14 போரில் தோற்றுப்போனவர்களைப் பார்த்து அவரின் தோல்வியைக் குறிப்பிட்டு எள்ளி நகையாடுவார் போல கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின் – பட் 229 காவலையுடைய அரண்களை அழித்த (கோட்டைக்)கதவை முறிக்கும் கொம்பினையும் இரும் புலி தொலைத்த பெரும் கை யானை – நற் 353/9 பெரிய புலியைக் கொன்ற பெரிய துதிக்கையையுடைய யானை பொன் போல் விறல் கவின் தொலைத்த குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே – ஐங் 230/4,5 பொன்னைப் போன்ற வெற்றிசிறந்த உன் அழகைக் காணாமற்போக்கிய குன்றினையுடைய நாடனுக்கே உன்னைக் கொடுப்பர், நல்மணம் முடித்து அரி தேர் நல்கியும் அமையான் செரு தொலைத்து ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ – பெரும் 490-492 பொன் (வேய்ந்த)தேரைத் தந்தும் மனநிறைவு கொள்ளானாய், போர்களை மாளப்பண்ணி (தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் புறமுதுகிட்டவிடத்தே விட்டுப்போன விண்(ணுக்குச்) செல்(வது போல் முன் கால்களைத் தூக்கும்)குதிரைகளுடன் பசிய சேணமும் தந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
Praise the Lord. V.V.good work sir.