சொல் பொருள்
(வி) 1. செலுத்து, 2. தீர்த்துவிடு, 3. அழி, இல்லாமல்செய், 4. கொல்,
சொல் பொருள் விளக்கம்
- செலுத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pay as debt or price, exhaust, cause to perish, kill
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கேளா மன்னர் கடி புலம் புக்கு நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி இல் அடு கள் இன் தோப்பி பருகி – பெரும் 140-142 (தன் சொல்)கேளாத மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று, விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகச் செலுத்தி (தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு, நீல பைம் குடம் தொலைச்சி நாளும் – பெரும் 382 நீலநிறம் அமைந்த தோல் பையிலுள்ள கள்ளை முற்றாக உண்டு தீர்த்து கடி காவின் நிலை தொலைச்சி – மது 153 காவலையுடைய பொழில்களின் நிலையை அழித்து ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி – நற் 43/3 மிகுந்த பசியையுடைய செந்நாய் மெலிந்த மரை என்னும் மானைக் கொன்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்