Skip to content
தொல்லோர்

தொல்லோர் என்பதன் பொருள் முன்னோர்.

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) முன்னோர்,

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

ancestors, forefathers

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும் – மலை 89

கொடை என்னும் தம் கடமையை ஆற்றிய அவனது முன்னோர் வரலாற்றையும்

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் - 6. கொலைக்களக் காதை சிலப்.மது 16/72

அறவோர்க்கு அளித்தலும் - சாவகர்க்குக் கொடுத்தலும், அந்தணர் ஓம்பலும் - பார்ப்பனரைப் பேணுதலும், துறவோர்க்கு எதிர்தலும் - துறவிகளை எதிர்க்கொள்ளுதலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை - மேலையோர் உயர்த்துக் கூறும் சிறப்பினையுடைய விருந்தினரை எதிர்கொள்ளுதலுமாய இவற்றை இழந்த என்னை, நும் பெருமகள் தன்னொடும் - நுமது தாயோடும், பெரும் பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்.

தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது - புறம் 58/4

தொல்லோர் சென்ற நெறியர் போலவும் - புறம் 58/25

மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன் - புறம் 399/20

துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு - சிலப்.புகார் 5/107

தூ மடி உடீஇ தொல்லோர் சிறப்பின் - சிலப்.மது 15/134

தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த - மணி 20/68

தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என - மணி 22/151

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *