Skip to content

சொல் பொருள்

1. (வி) கடவுளை வழிபடு, வணங்கு, 

2. (பெ) தொழுவம், மாடுகளை அடைக்கும் இடம்,

சொல் பொருள் விளக்கம்

கடவுளை வழிபடு, வணங்கு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

pray, worship

cattle-stall

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் – மது 193

மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் வழிபட்டுவரும் பிறையைப் போல

மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 160

மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும்

அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என
பிற்படு பூசலின் வழிவழி ஓடி – அகம் 7/14,15

வழிப்பறிக் கள்வர்கள் பசுக்கள் தொழுவை உடைத்துக் கொண்டுசென்றனவாக,
அவற்றின் பின்னே துரத்திச்செல்வோர் ஆரவாரிப்பது போல, அங்குமிங்கும் ஓடி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *