சொல் பொருள்
(பெ) 1. மனிதக் கூட்டம், 2. விலங்குகளின் கூட்டம், மந்தை, 3. பறவைகளின் கூட்டம், 4. பொருள்களின் கூட்டம்
சொல் பொருள் விளக்கம்
மனிதக் கூட்டம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
crowd, multitude, herds, flock of birds, collection
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேல் ஈண்டு தொழுதி இரிவு_உற்று என்ன – மலை 116 வேல்களோடு நெருக்கமாக (வந்த வேற்படையாகிய)கூட்டம் தோற்றோடியதைப் போன்று, கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி – அகம் 109/4 தம் கொம்பால் பகையானவற்றைக் குத்தி உழும் களிற்றியானைகளின் கூட்டம் கூட பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15 இளமையான காலையுடைய கொக்கின் (அங்குமிங்கும்)மெதுவாகப் பறந்துதிரியும் கூட்டம் கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி தூஉ அன்ன துவலை துவற்றலின் – மலை 362,363 கையால் எட்டித்தொடமுடியும் என்பதைப் போன்ற கார்காலத்து மேகக் கூட்டம், தூவுவதைப் போன்று நீர்த் திவலைகளை வீசியடிப்பதால், தீம் சுளை பலவின் தொழுதி உம்பல் பெரும் காடு இறந்தனராயினும் – அகம் 357/9,10 இனிய சுளைகளையுடைய பலா மரத்தின் கூட்டத்தையுடைய உம்பல் பெரும் காட்டை கடந்து சென்றுளாராயினும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்