சொல் பொருள்
(பெ) 1. வீட்டு வேலை செய்பவர், 2. தொழிலாளிகள்
சொல் பொருள் விளக்கம்
வீட்டு வேலை செய்பவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
servants, labourers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர் கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக – நெடு 49,50 காவலையுடைய அகன்ற மனைகளில் சிறியராகிய குற்றேவல் வினைஞர், கருங்கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமண அம்மியில் பலவித நறுமணப்பெருள்களை அரைக்க; நீர் தெவ்வு நிரை தொழுவர் பாடு சிலம்பும் இசை ஏற்றத்தோடு – மது 89,90 நீரினை முகக்கும் (ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள் பாடுதலால் ஒலிக்கும் இசையும், ஏற்றத்(தோடு) நெல் அரி தொழுவர் கூர் வாள்_உற்று என – நற் 195/6 நெற்கதிர் அறுக்கும் தொழிலாளர்களின் கூரிய அரிவாளால் அறுபட்டதனால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்