Skip to content

சொல் பொருள்

(வி) 1. சிரி, 2. மலர், 3. மகிழ், 4. ஒலியெழுப்பு, 5. ஏளனம் செய்,

சொல் பொருள் விளக்கம்

சிரி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

laugh, smile, bloom, as flower, rejoice, make a sound, mock

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உள்ளு-தொறும் நகுவேன் தோழி – நற் 100/1

நினைக்கும்போதெல்லாம் சிரிக்கின்றேன் தோழி!

நகு முல்லை உகு தேறு வீ – பொரு 200

மலர்ந்து சிரிக்கின்ற முல்லையினையும், சிந்துகின்ற தேற்றா மலரினையும்

சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ – கலி 59/20,21

ஒரு பாவைப்பிள்ளையைச் செய்து, அதனைப் பேணி, அதற்கு மணமுடிக்க விளையாட்டாகச் சோறு சமைத்து, நீ
நறிய நெற்றியையுடைய தோழியருக்கு மகிழ்ந்து பரிமாறும் நோன்பின் பயன் உனக்கு வந்து பொருந்துமோ

சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே – அகம் 117/9

காற்சிலம்புகள் ஒலிக்க நடந்து சென்ற என் மகளுக்கு.

இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவின
பொலம் தேர் கொண்கன் வந்தனன் இனியே
விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி
நலம் கவர் பசலையை நகுகம் நாமே – ஐங் 200/1-4

ஒளிவிட்டுப் பெரிதாக இருக்கும் பளபளத்த வளையல்களை அணிந்தவளே! உன் ஒளி மங்கிய நெற்றி
அழகு பெறும்படியாக
பொன்னாலான தேரினையுடைய தலைவன் வந்துவிட்டான் இப்போது;
குறுக்காக ஓடும் செவ்வரிகளைக் கொண்ட நீண்ட கண்களைத் திறப்பாயாக!
உன் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்ட பசலையைப் பார்த்து எள்ளி நகையாடுவோம் நாம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *