Skip to content

நகை நட்டு

சொல் பொருள்

நகை – இழை எனப்படும். தண்டட்டி, பாம்படம் போல்வன நகை.
நட்டு – முருகு, கொப்பு, காப்பு, தோடு, முதலியன நட்டு.

சொல் பொருள் விளக்கம்

முன்னது பேரணிகலங்களையும் பின்னது சிற்றணிகலங்களையும் குறிக்கும். முன்னவற்றிலும் திருகு அமைப்பு இருந்தாலும் பின்னவற்றில் திருகமைப்பே சிறப்பும் தனித்தன்மையும் உடையதாதல் கருதுக. முன்னவற்றில் பளிச்சிடலும் அசைவும் பின்னவற்றில் அசைவிலா நிலைப்பும் உண்மை கருதுக. “பெண்ணுக்கு நகை நட்டு என்ன போட்டீர்கள்?” என்று வினவார் அரியர்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *