சொல் பொருள்
நக்கல் – நக்கி உண்ணல்.
துக்கல் – நுகர்தல்.
சொல் பொருள் விளக்கம்
விழக்கூடாத இடத்தில் விழுந்த தேனை “நக்கவா துக்கவா?” என்பர். இரண்டற்கும் ஆகாது என்பதாம்.
கருமியினிடம் அகப்பட்ட பொருள் எவருக்கும் உதவாது போவதை விளக்க இவ்விணைச் சொல் பயன்படுகின்றதாம். “அவன் சொத்து நக்கவா துக்கவா ஆகும்?” என்பர். துக்கல்- துய்த்தல்; ‘துத்தல்’ என்பதும் ‘துற்றி’ என்பதும் அது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்