சொல் பொருள்
நக்கிக் குடித்தல் – உழையாமல் உண்ணல்
சொல் பொருள் விளக்கம்
“ஆற்றில் வெள்ளம் போனாலும் நாய் நக்கித்தானே குடிக்கவேண்டும்” என்பது பழமொழி. நாய் நீரை நக்கிக்குடிக்கும் அவ்வாறே கஞ்சி சோறு ஆயவற்றை நாய் உண்பதும் நக்குதல் எனவே சொல்லப்படும். நக்குதல் என்பது இழிவுப் பொருள் தருவதாக அமைந்துவிட்டது. அதுபோல் உழையாமலோ, உழைப்புக் கிட்டாமலோ இரந்து உண்பதை நக்கிக் குடித்தல் என்பது வழக்காக ஊன்றி விட்டது. நகை என்பதும் உயர் பொருளை விடுத்து இழி பொருளுக்கு இடமாகியதும் உண்டு. ‘நகையாண்டி’ என்பதே நையாண்டியாதல் அறிக.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்