சொல் பொருள்
நச்சு – நஞ்சு போல் அழிப்பது
பிச்சு – பங்குபோல் பிரிப்பது,
சொல் பொருள் விளக்கம்
“நச்சுப் பிச்சு எதுவும் இல்லை; ஆதலால் கவலை எதுவும் அவருக்கு இல்லை” என்பது நயப்புரை, நச்சு, சொத்து முழுவதையும் அழித்துவிடக் கூடிய தீய மக்கள், பிச்சு, பங்கு பாகம் என்று பிரித்துக்கொண்டு போகக் கூடிய உடன் பிறந்தார். தனி மகனாக இருந்து, அவனுக்குச் சொத்தை அழிக்கும் தீயமகனும் இல்லாமல் நன்மகன் இருந்தால் அவனை நச்சுப் பிச்சு இல்லாதவன் என்பர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்