சொல் பொருள்
நடுச்செங்கலை உருவல் – ஒரு தீமையால் பல தீமைக்கு ஆளாக்கல்
சொல் பொருள் விளக்கம்
ஒரு தளத்தின் நடுவேயுள்ள செங்கல்லை உருவினால் அதன் பக்கங்களில் உள்ள செங்கற்களும் ஒவ்வொன்றாகச் சரிந்து தளமே பாழ்பட நேரும். அவ்வாறே ஓர் அரிய செயலில் ஈடுபட்டுள்ளபோது அதற்கு அச்சாணியாக இருக்கும் ஒரு செயலைத் தடைப்படுத்தி விடுவது முழுத் தடையும் செய்ததாகவே முடியும். அன்றியும் முழுப்பயன் இழப்புடன், வீண் முயற்சியும், செலவும், மனத்துயரும் உண்டாகவே இடமாம்.“நன்றாகத் தொழில் ஓடிக்கொண்டிருந்தபோது நடுச்செங்கலை உருவுவது போல உருவி விட்டாளே” என்பது வழக்குரை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்