சொல் பொருள்
(வி) 1. நடை பழகு, 2. நளினமாக நட,
சொல் பொருள் விளக்கம்
நடை பழகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
learn to walk, walk gracefully
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் – நற் 250/3 விளையாட்டுவண்டிகொண்டு நடைபயின்றுகொண்டிருந்த இனிய மொழிபேசும் என் புதல்வனின் ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி அம் சில் ஓதி இவள் உறும் பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே – நற் 324/7-9 ஆடும்போது பந்தை உருட்டுபவள் போல ஓடி, அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவளின் மிகுந்த பஞ்சு போன்ற மென்மையான அடிகளால் நளினமாக நடந்துவருகின்றாள்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்