சொல் பொருள்
(பெ) 1. நட்பு, 2. அன்பு,
சொல் பொருள் விளக்கம்
நட்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
friendship, amity, love, affection
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன் புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே – புறம் 216/6,7 அவன் என்னை என்றும் இகழ்ச்சி இலனாய இனிய குணங்களையுடையவன்,பிணித்த நட்பினையுடையவன் புகழ் அழிய வரும் பொய்ம்மையை விரும்பான் பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு நாடாது இயைந்த நண்பினது அளவே – நற் 378/11,12 ஒலி முழங்கும் குளிர்ந்த நீர்ப்பெருக்கையுடைய கடற்கரைத்தலைவனோடு சிந்திக்காமல் உடன்பட்ட அன்பின் அளவு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்