சொல் பொருள்
நத்தல் – தின்னுதற்கு வாயலந்த குழந்தை
நறுங்கல் – சவலைப் பிள்ளை அல்லது நோயால் நறுங்கிப் போன பிள்ளை.
சொல் பொருள் விளக்கம்
நத்துதல் ஆர்வப்படுதல், நறுங்குதல் வளர்ச்சியின்றி இருத்தல். இத்தகு குழந்தைகள் பெற்றோர்க்கு ஓயாத தொல்லை தந்து கொண்டே இருக்கும். அழுகையும் அரற்றுமாக இருக்கும். நத்தல் நறுங்கலை வைத்துக் கொண்டு எப்படி எல்லாவற்றையும் நேரம் காலத்தில் முடிக்க முடியும் என ஏங்குவார் பலர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்