சொல் பொருள்
கருஞ்சேற்று மண்
சொல் பொருள் விளக்கம்
நத்தை வாழும் சேற்றுமண், களிமண்ணாகவும் கெட்டித் தன்மையதாகவும் இருக்கும். அம் மண்ணைக் கொண்டு சுவர் வைத்தாலும், முகடு பரப்பினாலும் நீரால் கரையாத கெட்டித் தன்மையது. ஆதலால், நத்தைமண் எனப்படும் கருஞ்சேற்று மண்ணைப் பழநாளில் கட்டடப் பணிக்குப் பயன்படுத்தினர். இன்றும் மதுரை மாவட்ட உசிலம்பட்டிப் பகுதியில் அத்தகு மண்வீடுகளைக் காணலாம். நத்தமண் என்பது மக்கள் வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்